தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு நாள் : 13 பேருக்கு கண்ணீர் அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு நாள் : 13 பேருக்கு கண்ணீர் அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு நாள் : 13 பேருக்கு கண்ணீர் அஞ்சலி
Published on

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர்நீத்தவர்களுக்கு தூத்துக்குடியில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பத்தின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி, ஜார்ஜ் ரோடு தருவை மைதானம் எதிரில் உள்ள புனித தோமையார் தேவாலயத்தின் முன்பு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாள் போராட்டம் நடைபெற்ற குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடந்த நினைவஞ்சலியில், உயிர்நீத்தோர் புகைப்படத்தின் முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், மௌன ஊர்வலமும் நடைபெற்றது. நினைவஞ்சலி கூட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com