தமிழ்நாடு
ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு துப்பாக்கிச் சூடு காரணமல்ல - தமிழக அரசு
ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு துப்பாக்கிச் சூடு காரணமல்ல - தமிழக அரசு
ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு துப்பாக்கிச் சூடு காரணமல்ல என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. துப்பாக்கிச் சூடு காரணமாக எழுந்த அழுத்தத்தினை மறைப்பதாகவே ஆலை மூடப்பட்டதாக வேதாந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு தமிழக அரசு சார்பில் இன்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
“சுற்றுச் சூழல் சார்ந்த நிபந்தனைகளை தொடர்ந்து மீறியதாலேயே ஆலை மூடப்பட்டது. நீர் நிலைகளை தெரிந்தே மாசுபடுத்துவதை எப்படி அனுமதிக்க முடியும்?. தாமிர கழிவுகளை அபாயகரமானவை அல்ல என வேதாந்தா கூறுவது சரியானது அல்ல” என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.