பேருந்து நிலையத்தில் கழுதைகளை அடைத்து நூதன போராட்டம்

பேருந்து நிலையத்தில் கழுதைகளை அடைத்து நூதன போராட்டம்

பேருந்து நிலையத்தில் கழுதைகளை அடைத்து நூதன போராட்டம்
Published on

கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அங்கு பயணிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். அத்துடன் பேருந்து நிலையத்தில் சுகாதாரமான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றவேண்டும் என்றும், அங்கேயே புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதற்காக நூதன போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கழுதைகளை அழைத்து வந்து பேருந்து நிலையத்தில் அடைக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com