\
அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் எப்போதும் இல்லை: டிடிவி.தினகரன்

அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் எப்போதும் இல்லை: டிடிவி.தினகரன்

அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் எப்போதும் இல்லை: டிடிவி.தினகரன்
Published on: 

அதிமுக ஆட்சியில் குடும்பமோ அல்லது தனிநபரோ எப்போதும் தலையிட்டதில்லை என அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பன்னீர்செல்வத்தின் செயல்பாடு அதிமுக என்ற எஃகு கோட்டையை பாதிக்காது என்றார். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

விதிகளுக்குட்பட்டுதான் சபாநாயகர் சட்டப்பேரவையை நடத்தினார் என்று கூறிய தினகரன், பேரவையில் கலவரம் செய்து ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சி செய்தார் என்றும் குற்றம் சாட்டினார். 2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் எனவும் தெரிவித்தார். ஆர்.கே.நகர் தேர்தலில் கட்சி யாரை தேர்வு செய்கிறதோ அவர்தான் வேட்பாளர் என்று அவர் கூறினார். ஜெயலலிதா கூறியதால் அரசியலை விட்டு தான் ஒதுங்கியிருந்ததாகவும் தினகரன் தெரிவித்தார். அதிமுகவுக்கு மக்கள் எதிர்ப்பு இருப்பது போன்ற பொய்ப்பரப்புரை செய்யப்படுகிறது என்றும் அதிமுகவின் எதிரி என்றும் திமுகதான் என்றும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com