18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு இன்று விசாரணை!
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை கடந்த ஆண்டு
செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை அடுத்து 18 தொகுதிகள்
காலியாக இருப்பதாக அரசு இதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சட்டப்பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18 எம்எல்ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குடன் சேர்த்து,பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக தொடர்ந்து வழக்கும் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஆர்.கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று, நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்திற்கு
சென்றார். பேரவை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய, தினகரன் மட்டும்
தனி ஒருவராக எதிர் தரப்பில் அமர்ந்தார். இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வழக்கு இன்று விசாரணைக்கு
வருகிறது. சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டு வருவார்களாக
என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.