\
விசாரணை ஆணையத்தில் தினகரன் கொடுத்த பென் ட்ரைவில் இருப்பது இதுதான்!

விசாரணை ஆணையத்தில் தினகரன் கொடுத்த பென் ட்ரைவில் இருப்பது இதுதான்!

விசாரணை ஆணையத்தில் தினகரன் கொடுத்த பென் ட்ரைவில் இருப்பது இதுதான்!
Published on

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பில் பென் டிரைவ் ஒன்று ஒப்படைக்கப்பட்டது.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான ஆதாரங்கள் அடங்கிய தினகரனின் பென் டிரைவ் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டது. டிடிவி தினகரன் தரப்பில் அவரது வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் பென் டிரைவை ஒப்படைத்தார். அந்த பென் டிரைவில் என்ன உள்ளது என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் பெரிதும் ஆவலை உண்டாக்கியது.

பின்னர் பென் டிரைவில் என்ன உள்ளது என செய்தியாளர்களிடம் கூறிய செந்தூர்பாண்டியன், “நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் பென் டிரைவ் ஒன்றை நாங்கள் ஒப்படைத்துள்ளோம். அதை நீதிபதி கணினியில் பொருத்தி பார்த்துவிட்டு, அதில் உள்ள தகவல்களை எடுத்துக்கொண்டு ஒப்புதல் சீட்டு வழங்கினார். அந்தப் பென் ட்ரைவில் ஜெயலலிதா உயிருடன் இருந்தது, உடல்நிலை பாதிப்படைந்து இருந்தது, சிகிச்சை பெற்றது உள்ளிட்ட வீடியோ ஆதாரங்கள் உள்ளன” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com