ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் மனுத்தாக்கல் செய்ய தொப்பியுடன் வந்தார்.
சசிகலா அணியின் அஇஅதிமுக அம்மா கட்சி சின்னமான தொப்பியை அணிந்தபடி தினகரன் ஊர்வலமாக வந்தார். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரான பிரவீண் நாயரிடம் தினகரன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனு தாக்கலின்போதும் அவர் தனது சின்னமான தொப்பியை அணிந்திருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், இரட்டை இலை சின்னம் தற்காலிகமாகவே முடக்கப்பட்டிருப்பதாகவும் அதனை மீட்பது உறுதி என்றும் தெரிவித்தார். சின்னம் முடக்கப்பட சதியே காரணம் என்றும் அதன் பின்னணியில் இருப்பது யார் என மக்களுக்கு தெரியும் என்றும் தினகரன் குறிப்பிட்டார்.