"பொய்யான கணிப்புகள்" : டிடிவி தினகரன்

"பொய்யான கணிப்புகள்" : டிடிவி தினகரன்

"பொய்யான கணிப்புகள்" : டிடிவி தினகரன்
Published on

வாக்கு எண்ணிக்கைக்குப் பிந்தைய தேர்தல் கணிப்புகளை புறந்தள்ளி, வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்துவோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இதையடுத்து 23ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதில் பாஜகவே பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் எனப் பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேபோன்று தமிழகத்தில் திமுகவே அதிக இடங்களைப் பிடிக்கும் எனவும், அதிமுக கூட்டணி குறைவான இடங்களை மட்டுமே பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் பல ஊடகங்கள் தெரிவித்திருந்தன.


இந்நிலையில் இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் அதிமுகவையும், திமுகவையும் புறந்தள்ளி அமமுகவின் பரிசு பெட்டகம் சின்னத்துக்குத்தான் வாக்களித்திருப்பதாக தெரிவித்துள்ளார். வெற்றிக்கு வாய்ப்பில்லை என்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை அவிழ்த்துவிட்டிருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அமமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்புகளை தொண்டர்கள் புறந்தள்ளிவிட்டு, விழிப்புடன் வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com