\
“நக்கீரன் கோபால் கைது சரி” - டிடிவி தினகரன்

“நக்கீரன் கோபால் கைது சரி” - டிடிவி தினகரன்

“நக்கீரன் கோபால் கைது சரி” - டிடிவி தினகரன்
Published on: 

ஆளுநர் மாளிகையின் புகார்படி நக்கீரன் கோபாலை கைது செய்தது சரியே என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் டிடிவி தினகரன் வந்தார். முன்னதாக திருச்சியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ‘நக்கீரன்’ கோபால் கைது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “உண்மை செய்தி எழுதினால் யாரும் கேட்கப்போவதில்லை. அவதூறாக செய்தி எழுதினால் நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள். கைது செய்தது சரியே. அது தவறில்லை. எங்கள் கொள்கைக்கும், பாஜக கொள்கைக்கும் ஒத்து வராது. நடைபயிற்சி மேற்கொண்ட போது அமைச்சர் விஜயபாஸ்கரை சந்திக்க நேர்ந்தது. வணக்கம் தெரிவித்த அவர், என்னிடம் குறைகளை கூறினார். உங்களுடைய குறைகளை என்னிடம் கூற தேவையில்லை என்று கூறி மறுத்துவிட்டேன். இரட்டை வேடம் ஏன் போட வேண்டும்? சசிகலாவை ஏற்றுக் கொள்வோம் என்று கூறுபவர்கள், அவரை சிறையில் சென்று சந்திக்கலாமே? அதற்கு காரணம் சசிகலா சிறையில் இருப்பதனாலும், நான் செயல்பட்டு கொண்டிருப்பதாலும் அவர்கள் அப்படி கூறி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.