\
டிடிவி தினகரனுக்கு மே.29 வரை காவல் நீட்டிப்பு

டிடிவி தினகரனுக்கு மே.29 வரை காவல் நீட்டிப்பு

டிடிவி தினகரனுக்கு மே.29 வரை காவல் நீட்டிப்பு
Published on

இரட்டைஇலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனுக்கு வரும் மே.29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டைஇலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

கைதான டிடிவி தினகரனை டெல்லி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீஸ் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி டெல்லி தனி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மே.15 ஆம் தேதி வரை (இன்று) நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினகரனின் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி வரை அவரது காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com