\
கொரோனா நோயாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சையா ? - டிடிவி தினகரன் கவலை

கொரோனா நோயாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சையா ? - டிடிவி தினகரன் கவலை

கொரோனா நோயாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சையா ? - டிடிவி தினகரன் கவலை
Published on

கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை எடுக்க‌லாம் என்ற திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுமையாக குணமடையாத கொரோனா நோயாளிகளை, விருப்பப்பட்டால் வீட்டுக்குச் செல்லலாம் என கூறி அனுப்‌‌பிவைக்கும் பொறுப்பில்லாத செயல்களும் நடப்பதாக ‌வரும் தகவல்கள் கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இனி கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு அவரவர் வீடுகளில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியெனில் அவர்களை‌ மருத்துவ‌மனை‌களில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாத மோசமான நிலைக்கு அரசு வந்துவிட்டதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொரோனா பேரிடரில் உண்மையைக் கூறி, மக்களைக் காப்பாற்ற தேவையானவற்றை செய்யுமாறு தினகரன் கேட்டுக் கொண்டு‌‌ள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com