மாணவர்கள் மீது தடியடி நடத்துவதா ? டிடிவி தினகரன் கண்டனம்

மாணவர்கள் மீது தடியடி நடத்துவதா ? டிடிவி தினகரன் கண்டனம்

மாணவர்கள் மீது தடியடி நடத்துவதா ? டிடிவி தினகரன் கண்டனம்
Published on

லேப்டாப் வழங்கக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையோடு கொண்டுவந்த திட்டத்தை தற்போதைய அரசு இரண்டு ஆண்டுகளாக முடக்கி வைத்துள்ளது. அதனை கேட்டு போராடும் மாணவர்கள் மீது காவல்துறையை வைத்து அடித்து விரட்டுவது சரியல்ல என தெரிவித்துள்ளார். 


முன்னதாக, 2017-18ம் ஆண்டு கல்வி பயின்ற மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கக்கோரி அணைத்து பள்ளி மாணவர்கள் சார்பில், மதுரை (மாட்டுத்தாவணி) எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர், அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்திய நிலையில், அவர்கள் கலைந்துச் செல்லாததால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர், இதனால் மாணவ, மாணவிகள் பேருந்து நிலையப் பகுதிக்குள் கலைந்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது, இந்த சாலை மறியல் தொடர்பாக 6 மாணவர்களை அண்ணா நகர் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com