தமிழ்நாடு
என்னுடைய இணையத்தில் இரட்டை இலை இருந்ததைப் பார்க்கவில்லை: டிடிவி தினகரன்
என்னுடைய இணையத்தில் இரட்டை இலை இருந்ததைப் பார்க்கவில்லை: டிடிவி தினகரன்
என்னுடைய இணையதளத்தில் இரட்டை இலை சின்னம் இருந்ததைப் பார்க்காமல் விட்டு விட்டோம். அதை எடுத்து விடுவோம் என டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தை நீங்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்தார். என்னுடைய இணையதளத்தில் ஏற்கனவே இரட்டை இலை இருந்தது. அதை நாங்கள் பார்க்காமல் விட்டுவிட்டோம். அதற்கு பதில் கொடுத்துள்ளோம். இரட்டை இலையை எடுத்துவிடுவோம். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. விசாரிக்கிறார்கள். எது சரியோ அதனை செய்யட்டும். எதுவாக இருந்தாலும் அதனை எதிர் கொண்டு நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம் என்று தினகரன் கூறினார்.