TTF Vasan
TTF Vasan TTF vasan

TTF VASAN | அதி வேகமாக பைக் ஓட்டியதால் விபத்துக்குள்ளானர் பிரபல யூடியூபர்..!

TTF வாசன் வீலிங் செய்யும் போது ஏற்பட்ட விபத்து குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
Published on

2K கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் TTF வாசன். அதிவேகமாக இரு சக்கரம் வாகனம் ஓட்டி இளைஞர் மத்தியில் அப்ளாஸ் அள்ளியவர் இவர். அதே சமயம், அதனாலேயே பல பிரச்னைகளிலும் சிக்கியிருக்கிறார். தற்போது மஞ்சள் வீரன் என்ற படத்திலும் நடித்துவருகிறார். இன்று காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக சாலையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்தபோது வீலிங் செய்ய முற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

அதனால் நிலைதடுமாறி, சாலையிலிருந்து பறந்து தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்திருக்கிறார். தலை, கை, கால்களில் பலத்த அடிபட்டிருப்பதால் படுகாயங்களுடன் காரப்பேட்டை அருகிலுள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com