\
கார் - லாரி மோதல்: 3 பேர் பரிதாப பலி

கார் - லாரி மோதல்: 3 பேர் பரிதாப பலி

கார் - லாரி மோதல்: 3 பேர் பரிதாப பலி
Published on

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கார் மீது லாரி மோதி‌ய விபத்தில் ‌3 பேர் சம்பவ இடத்தி‌லேயே உயிரிழந்தனர். ‌

வழிபாட்டிற்காக கேரளாவில் இருந்து காரில்‌ ‌வந்து கொண்டிருந்தவர்கள் மீது, ‌மீன் ஏற்றிக்கொண்டு மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, பரவை எனும் இடத்தில் மோதி‌‌ விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கேரள மாநிலம் பாலக்காட்டு பகுதியை சேர்ந்த திலீப், அவரது தாய் கிருஷ்ணவேணி மற்றும் அவரது உறவினர் ஆர்சாமி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், உயிரிழந்த திலீப்பின் தந்தை பகவதீஸ்வரன், தங்கை தரணி ஆகிய இருவரும் படுகாயத்துடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மீன் லாரி ஓட்டுநர் ரவி‌ச்சந்திரனும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com