\
”தவறாக நடக்க முயன்றார்” - மதுரையில் ஆண் நண்பருடன்  நடுரோட்டில் சண்டையிட்ட உ.பி துணை நடிகை!

”தவறாக நடக்க முயன்றார்” - மதுரையில் ஆண் நண்பருடன் நடுரோட்டில் சண்டையிட்ட உ.பி துணை நடிகை!

”தவறாக நடக்க முயன்றார்” - மதுரையில் ஆண் நண்பருடன் நடுரோட்டில் சண்டையிட்ட உ.பி துணை நடிகை!
Published on: 

மதுரையில் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த துணை நடிகை தன்னுடைய ஆண் நண்பருடன் நடு ரோட்டில் வாக்குவாதம் செய்து சண்டை போட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில், சொகுசு காரின் உள்ளே இளம் ஜோடி சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய அவர்கள் நடு ரோட்டில் சண்டை போட்டுள்ளனர். இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக எஸ்எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த விஸ்வநாத் பட்டாச்சாரியா என்பவரின் மகள் அங்கீதா பட்டாச்சாரியா என்பதும் அவர் துணை நடிகை என்பதும் தெரியவந்தது. மேலும் இவர், தனது ஆண் நண்பரான பீகார் மாநிலம் ராம்நகர் வெஸ்ட் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவருடன் மும்பையில் இருந்து கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து கோவையில் வாடகை கார் எடுத்து இருவரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்க்க திட்டமிட்டுருந்தனர். நேற்று மதுரையில் விடுதி ஒன்றில் தங்கிய இருவரும் இன்று மாலை ராமேஸ்வரம் செல்ல தயாரான நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகியதாகவும், துணை நடிகையான சங்கீதா பல்வேறு படங்களில் நடித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றி பார்க்க திட்டமிட்டு இருந்த நிலையில், தனது ஆண் நண்பர் தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு தனது பணத்தையும் எடுத்துக் கொண்டதால்இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறினர்.

இதையடுத்து இருவரையும் விசாரணை செய்த காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன், இருவரும் உடனடியாக தங்களது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். மும்பையில் இருந்து மதுரை வந்து சந்தியில் நின்று சண்டையிட்ட துணை நடிகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com