தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்
தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்pt desk

திருச்சி | மின்சாரம் தாக்கி கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்

திருச்சியில் சர்ச் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த இரு இளைஞர்கள் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: வி.சார்லஸ்

திருச்சியில் சர்ச்' விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. இதில், ஒப்பந்தத்தக்காரர் நடராஜ் என்பவரது மேற்பார்வையில் 5 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர், இந்நிலையில், நேற்று தகரத்தால் ஆன மேற்கூரை அமைக்கும் பணியில் மூன்று பேர் ஈடுபட்டிருந்தனர், அப்போது உயரமான நகரும் ஏணியில் ஏறி தகரத்தை பொருத்திய போது, ஏணி மின்கம்பியில் மோதியுள்ளது.

இதில் ஏணி மீது மேலே நின்று தகரத்தை கையில் வைத்திருந்த புதுக்கோட்டை மாவட்டம், தன்னாங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபி என்ற வெள்ளைச்சாமி, தர்மபுரியைச் சேர்ந்த பாக்யராஜ் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், பின்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய மூன்றுபேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில், வெள்ளைச்சாமி மற்றும் பாக்யராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்
சிதம்பரம் | ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த சாக்கு மூட்டையில் இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

இதையடுத்து சிவக்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து உயிரிழந்த இருவரது உடல் பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது, இந்த விபத்து குறித்து திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com