திருச்சி: குளிக்கும்போது கிணற்றில் தவறிவிழுந்த பள்ளி மாணவன் சடலமாக மீட்பு

திருச்சி: குளிக்கும்போது கிணற்றில் தவறிவிழுந்த பள்ளி மாணவன் சடலமாக மீட்பு
திருச்சி: குளிக்கும்போது கிணற்றில் தவறிவிழுந்த பள்ளி மாணவன் சடலமாக மீட்பு

சிறுகனூர் அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவன் 48 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி.பே.அகரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜன் - சித்ரா தம்பதியர். இவர்களது மகன் முபிஷேக் (16) பாடாலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் பிகே அகரத்தில் உள்ள சுமார் 90 அடி ஆழ கிணற்றில் நேற்று மாலை மாணவன் அவரது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கடுமையாக மழை பெய்ததால் அனைவரும் கிணற்றில் இருந்து மேலே ஏறிவந்தனர். அப்போது முபிஷேக் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார்.

இதுகுறித்து புள்ளம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் அதிகமாக தண்ணீர் இருந்ததால் மாணவனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் பொதுமக்களும் மாணவணின் உடலை மீட்பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 48 மணிநேர தொடர் போராட்டத்திற்குப் பின் மாணவனின் உடல் கிணற்றில் உள்ள பாறையின் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து உடலை கைப்பற்றிய சிறுகனூர் போலீசார், உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com