\
"ராகவன கேட்காதவங்க என்னகிட்ட மட்டும் ஏன் பாரபட்சம்?" - திருச்சி சூர்யா சிவா பரபர பேச்சு!

"ராகவன கேட்காதவங்க என்னகிட்ட மட்டும் ஏன் பாரபட்சம்?" - திருச்சி சூர்யா சிவா பரபர பேச்சு!

"ராகவன கேட்காதவங்க என்னகிட்ட மட்டும் ஏன் பாரபட்சம்?" - திருச்சி சூர்யா சிவா பரபர பேச்சு!
Published on

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா சிவா அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருந்தார். அதன் பிறகு பாஜகவின் உறுப்பினரான டெய்சியுடனான தொலைபேசி உரையாடலில் அவரை ஆபாசமாக பேசியதாக திருச்சி சூர்யா சிவா மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் பறந்தன.

இதன் காரணமாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சூர்யா சிவாவை இடைநீக்கம் செய்வதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை. இதனையடுத்து சூர்யா சிவா தான் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் புதிய தலைமுறையின் சிறப்பு நேர்காணலில் பங்கேற்று திருச்சி சூர்யா சிவா முக்கியமான பல விவகாரங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில், ஏன் திடீரென பாஜகவில் இருந்து விலகினீர்கள்? டெய்சியும் நீங்களும் பேசியது, காயத்ரி ரகுராம் வெளியிட்ட ஆடியோ இவையெல்லாம் வெவ்வேறானவையா? என பல கேள்விகளுக்கு திருச்சி சூர்யா சிவா பதிலளித்திருக்கிறார்.

அதனை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் யூடியூப் லிங்க்கில் காணலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com