திருச்சி: மேடையில் நடனமாடியபடியே பட்டம் பெற வந்த மாணவர்.. திகைத்து நின்ற ஆசிரியர்கள் - வைரல் வீடியோ

திருச்சி தனியார் கல்லூாயில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவர் நடனமாடியபடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
students dance
students dancept desk

செய்தியாளர்: பிருந்தா

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதையடுத்து பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தொடர்ந்து பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது.

Students dance
Students dancept desk

இந்நிலையில், திருச்சியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவதற்கு நடனமாடியபடியே வந்த மாணவன், பட்டத்தை பெற்றுக் கொண்டு நடனமாடிய படியே சென்றார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பட்டத்தை பெற்ற மாணவர் நடனமாடியதை சற்றும் எதிர்பாராத மேடையில் இருந்தவர்கள், அந்த மாணவனை தடுத்து நிறுத்தி அனுப்பும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com