திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை!

தீவிரவாத தடுப்பு ஒத்தியை குறித்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியாவிடம், கமெண்டோ படைவீர்கள் விளக்கம் அளித்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில்,நேற்று இரவு தீவிரவாத தடுப்பு நடவடிக்கை தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், திருச்சி மாநகர காவல் துறையினருடன் இணைந்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கு நேரில் வந்திருந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, வீரர்களின் ஒத்திகை பயிற்சியை கண்காணித்தார்.

நள்ளிரவு நேரத்தில் ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றிலும், துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படைகள் வீரர்கள் திடிரென வலம் வந்ததால், அங்கு என்ன நடக்கிறது? என தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 200க்கும் மேற்பட்டோர் , தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகையில் ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும்.

பக்தர்களை போன்று கோவிலுக்கு உள்ளே சென்று பதுங்கிக்கொள்ளும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து, தேசிய பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்துவது போன்ற ஒத்திகை நடைபெற்றது. அதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த தீவிரவாத தடுப்பு ஒத்தியை குறித்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியாவிடம், கமெண்டோ படைவீர்கள் விளக்கம் அளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com