திருச்சி: தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திய நாய்... அசந்துபோன பார்வையாளர்கள்!

திருச்சியில் தெற்கு ரயில்வே சார்பில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில், மோப்ப நாய் தேசியக்கொடிக்கு மரியாதை செய்தது, பார்வையாளர்களைக் கவர்ந்தது.

திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் மேக்ஸ், டான், ராக்கி என்ற மோப்பநாய்கள், பயிற்சியாளர்களின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு, தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தின.

இதில் மோப்ப நாயொன்று தமிழ் மொழிக்கு பணிந்து நடந்தது, தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது உள்ளிட்ட செயல்பாடுகள் பார்வையாளர்களைக் வெகுவாக கவர்ந்தது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com