\
இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சோதனைக் காலம் - திருச்சி சிவா

இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சோதனைக் காலம் - திருச்சி சிவா

இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சோதனைக் காலம் - திருச்சி சிவா
Published on

டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக எம்.பி திருச்சி சிவா இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சோதனைக் காலம் என்று கூறியிருக்கிறார். 

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி திருச்சி சிவா, ‘’கடந்த சில வாரங்களில் விவசாயிகள் பிரச்னை, பெகாசஸ் மற்றும் விலைவாசி ஏற்றம் ஆகிய மூன்று பிரச்னைகளைத்தான் நாங்கள் முன்வைத்தோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மேகதாது மற்றும் நீட் தேர்வு போன்ற பிரச்னைகள் இருந்தாலும், நாங்கள் பிரத்யேகமான மூன்று பிரச்னைகளைத்தான் முன்வைத்து வருகிறோம்.

ஆனால் இந்த அரசு எதிர்க்கட்சிகளை மதிப்பதில்லை. நாடாளுமன்றத்தின் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சோதனைக் காலம்’’ என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com