மாஸ்க், மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருச்சி காவல்துறை அதிகாரி ஆனி விஜயா

மாஸ்க், மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருச்சி காவல்துறை அதிகாரி ஆனி விஜயா
மாஸ்க், மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருச்சி காவல்துறை அதிகாரி ஆனி விஜயா

முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக்கவசம் மற்றும் மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா. 

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் ஆனி விஜயா இன்று காலை, திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வாகனங்களில் இ- பதிவு, மற்றும் முகக் கவசம் அணிந்திருப்பது போன்றவற்றை கண்காணித்தார். முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக்கவசம் மற்றும் மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இது குறித்து ஆனி விஜயா கூறுகையில், ''இன்றைய சூழலில் ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. நமது தமிழக முதலமைச்சர் அவர்களும் சுகாதாரத் துறையினரும் மிகவும் வேகமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்களாகிய நாம் அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் இப்போது மரக்கன்று வைத்தால் வருங்காலத்தில் ஆக்சின் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கும். அதன் முதல் படியாக தான் இன்று முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக்கவசம் மற்றும் மரக்கன்று கொடுத்து மரம் வளர்க்க ஊக்குவித்தோம். வெளியில் தேவை இன்றி நடமாட வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறித்தினோம்'' என்றார் அவர்.

அப்போது சிறுமி ஒருவர், ஆனி விஜயா கொடுத்த மரக்கன்றுக்கு நன்றி கூறியதுடன், இனிமேல் எனது பெற்றோரை அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர விடமாட்டேன் என்று உறுதியளித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com