திருச்சி: உயிரிழந்த உரிமையாளரின் சடலத்தை நெருங்கவிடாமல் தடுத்த வளர்ப்பு நாய்

திருச்சியில் பூட்டிய வீட்டிற்குள் மூன்று நாட்களாக இறந்து கிடந்த உரிமையாளரின் சடலத்தை நெருங்கவிடாமல் அவரது வளர்ப்பு நாய் தடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்புதிய தலைமுறை

திருச்சியில் மலைக்கோட்டை கீழ் ஆண்டாள் வீதி அருகே திருவள்ளுவர் நகரில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருபவர் மதியழகன். இவர், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் சுவாமி ஊர்வலத்தின்போது சுவாமியை தூக்கும் சீர்பாதம் பணியை செய்து வருகிறார். மதுவுக்கு அடிமையானதால், மனைவியை பிரிந்து மதியழகன் தனிமையில் வசித்து வந்துள்ளார். கடந்த 11ஆம் தேதி வீட்டிற்குள் சென்றவர் அதன் பின்னர் வீட்டின் கதவை திறக்கவே இல்லை என கூறப்படுகிறது.

Death
DeathFile Photo

இந்நிலையில் மதியழகனின் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் மதியழகனின் வீட்டிற்குள் அக்கம் பக்கத்தினர் நுழைய முயன்றுள்ளனர். ஆனால், வீட்டிற்குள் யாரையும் நுழைய விடாமல் மதியழகனின் வளர்ப்பு நாய் தடுத்ததுடன் தொடர்ந்து குரைத்து வந்துள்ளது. இதுதொடர்பாக கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் மூலம் நாயை பிடித்த காவல்துறையினர், மதியழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com