\
91 வயதில் திருமணக்கோலம் கொண்ட தம்பதிகள்: மெய்சிலிர்த்த மக்கள்!

91 வயதில் திருமணக்கோலம் கொண்ட தம்பதிகள்: மெய்சிலிர்த்த மக்கள்!

91 வயதில் திருமணக்கோலம் கொண்ட தம்பதிகள்: மெய்சிலிர்த்த மக்கள்!
Published on

திருச்சியில் 91 மற்றும் 80 வயது நிரம்பிய தம்பதிகள் திருமணக்கோலம் கொண்டதை கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.

திருச்சி உறையூரைச் சேர்ந்த ஒய்வுப் பெற்ற ரயில்வே ஊழியர் சீனிவாசன் (91). அவரது மனைவி பத்மாவதி (80). இந்த தம்பதிகளுக்கு இன்று 90 ஆம் வயது திருமணம் உறையூர் ராமர் மடத்தில் நடந்தது. அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் என அனைவரும் ஆசி பெற்றனர்.

இத்திருமணத்தில் 4 தலைமுறைகளை சேர்ந்த மகன், மகள் வழி பேரப்பிள்ளைகளுடன், உறவினர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 1955 ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி 60, 70, 80, ஆகிய வயதுகளில் திருமண கோலம் கண்டதோடு, தற்போது 91 வது வயதிலும் திருமண கோலம் கொண்டுள்ளனர். இதனை அந்த ஊர்மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com