Trichy NIT
Trichy NITpt desk

திருச்சி: என்.ஐ.டி கல்லூரியில் மாணவி காணவில்லை? காவல் நிலையத்தில் புகார்!

திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் மாணவி ஒருவர் காணாமல் போயிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
Published on

செய்தியாளர்: சுரேஷ்

துவாக்குடி அருகே உள்ள என்.ஐ.டி. கல்லூரி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி கல்வி படித்து வருகின்றனர். வெளி மாநில மாணவ மாணவிகள், வெளியிலும், கல்லூரியின் விடுதியிலும் தங்கி பயில்கின்றனர்.

Police station
Police stationpt desk

இந்த நிலையில், கல்லூரி விடுதியில் தங்கி எம்.சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி கடந்த 15ஆம் தேதி முதல் காணாமல் போயுள்ளார். அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், புகாரின் பேரில், துவாக்குடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Trichy NIT
“சுட்டெரிக்கும் சூரியன்... வரலாறு காணாத வெயில்! வரும் வாரங்களில் குறைய வாய்ப்பு” - பிரதீப் ஜான்

கடந்த சில நாட்களுக்கு முன்பு என்ஐடி கல்லூரி விடுதி மாணவியிடம், வெளிநபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், தற்போது மாணவி ஒருவர் மாயமாகி இருப்பதும், அந்த தகவல் 4 நாட்களுக்கு பிறகு வெளியாகி இருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com