நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூசகம்

நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூசகம்
நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூசகம்

நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு பொறுத்திருந்தால் முறைப்படி செய்தியாளர்களை சந்தித்து தகவல் சொல்லப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூசகமாக தெரிவித்தார்.

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, திருச்சி விமான நிலையத்திற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்தார். அப்போது புதிய தலைமுறை செய்தியாளர் அவரிடம் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக ஏதேனும் புதிய சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதா? என்று கேட்ட கேள்விக்கு....

"'நிச்சயமாக', பொறுத்திருந்தால், முறைப்படி செய்தியாளர்களை சந்தித்து தகவல் சொல்லப்படும்" என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சூசகமாக பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com