தமிழ்நாடு
சேதம் அடைந்துள்ள அரசு மருத்துவமனை மேற்கூரை: பொதுமக்கள் அச்சம்!
சேதம் அடைந்துள்ள அரசு மருத்துவமனை மேற்கூரை: பொதுமக்கள் அச்சம்!
திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெறும் உள் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், மருத்துவமனை மேற்கூரை சேதம் அடைந்துள்ளதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
முசிறி அரசு மருத்துவமனை கட்டிடம் 1971-ம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த கட்டடம் தற்போது மேற்கூரை பெயர்ந்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும், சேதமடைந்த பகுதியை முழுவதுமாக அகற்றாமல், அதன் மேலேயே பூச்சு வேலை நடைபெறுவதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் நோயாளிகள் படுக்கையில் இருக்கும்போதே பூச்சு வேலை பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. சோமனூர் பேருந்து நிலைய விபத்து, பொறையார் பணிமனை விபத்து போன்று நிகழாமல் முன்னரே தடுக்க, அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.