பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு | சீமான் மீது வழக்கு பதிவு நீதிமன்றம் உத்தரவு
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜனவரி மாதம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மணப்பாறையைச் சேர்ந்த வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் என்பவர் சர்ச்சையாக பேசியதாக சீமான் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மனு ரசீது மட்டும் கொடுத்து விட்டு வழக்குப் பதிவு செய்யாமல் புகாரை முடித்து வைத்து விடுவதாக கூறி உள்ளனர்.
ஆதாரங்கள் கொடுக்கப்படும் வழக்குப் பதிவு செய்யாமல் இருந்ததால் வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் இதுதொடர்பாக மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.