மா இலைகளில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்த திருச்சி அரசுபள்ளி ஆசிரியை

மா இலைகளில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்த திருச்சி அரசுபள்ளி ஆசிரியை

மா இலைகளில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்த திருச்சி அரசுபள்ளி ஆசிரியை
Published on

மா இலையில் 1330 குறள் எழுதி சாதனை படைத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கோடியாம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் அமுதா. இவர் பாண்டிச்சேரியில் நடைபெற்ற உலக சாதனையாளர்கள் போட்டியில் பங்கேற்றார். அப்போது மா மரத்தின் 30 இலைகளில், 1330 திருக்குறளையும் 20 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு பாண்டிச்சேரியில் `ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனத்தின் பொறுப்பாளர் வெங்கடேசன், பாராட்டி சான்றிதழ் வழங்கினார். திருக்குறள் உலக சாதனையாளர் சங்கத்தின் நிறுவனங்களும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆசிரியருக்கு வழங்கியுள்ளனர். 

திருக்குறளை மா மரத்தின் தளிர் இலைகளில் எழுதி சாதனை படைத்த தொட்டியம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியைக்கு, சகஆசிரியர்களும், கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகின்றது. அதை கீழே காணுங்கள்!

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com