தமிழ்நாடு
திருச்சி: அரசுப்பள்ளி மாணவனை பிரியாணி அண்டாவில் அடைத்து கடத்த முயற்சி? தாய் புகார்! #Video
திருச்சியில் தொடக்கப்பள்ளி மாணவரை, சக மாணவர்கள் பிரியாணி அண்டாவில் வைத்து கடத்திச் சென்றதாக, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் ஒரு சிறுவன், கடந்த 7 ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது வழியில் சக மாணவர்கள் 2 பேர், அவரின் கை - கால்களைக் கட்டி பிரியாணி அண்டாவில் அடைத்து பாத்திரக்கடையின் சரக்கு வாகனத்தில் வைத்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் தாயார் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார்.
school studentpt desk
தன் புகாரில், அந்த வாகன ஓட்டுநரின் உதவியாளர்தான் தன் மகனை விடுவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார் அத்தாய். இதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுவர்களை எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், அவர்களை கண்டித்து அனுப்பி வைத்தனர்.