அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சை?... விவசாயிக்கு நேர்ந்த அதிர்ச்சியான சோகம்

அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சை?... விவசாயிக்கு நேர்ந்த அதிர்ச்சியான சோகம்
அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சை?... விவசாயிக்கு நேர்ந்த அதிர்ச்சியான சோகம்

திருச்சி அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தனது கைவிரல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முசிறி அருகே தேவானுரை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி ஒருவர் குற்றச்சாட்டியுள்ளார்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தேவானூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர். விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த மாதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக தாத்தையங்கார்பட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் பாதிப்பு இல்லை என தெரியவந்தது.

அங்கு ஊசி போட்டு மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பின்னர் இரண்டு நாட்கள் ஆகியும் மூச்சுத்திணறல் குணமடையாத காரணத்தால் மேல்சிகிச்சைக்காக தாத்தையங்கார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 21.9.2020 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார்.

அங்கு அவருக்கு வழங்கப்பட்ட தவறான சிகிச்சையினால் இடது கை விரல்களில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராமரின் இடது கை விரல்கள் முதலில் நீல நிறமாக மாறியுள்ளது. பின்னர் அது புண்ணாக மாறியதுடன் விரல்கள் இப்போது கருப்பு நிறமாக மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமர் சிகிச்சையை மேலும் தொடராமல் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடந்த 3.10.2020 அன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். பின்னர் தனியார் மருத்துவமனையில் ஆலோசனை பெற்றதற்கு பாதிக்கப்பட்டுள்ள ஆள்காட்டி விரலை வெட்டி நீக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

விவசாய கூலி வேலை செய்து வரும் ராமர் இதனால் மிகுந்த பாதிப்படைந்துள்ளார். எனவே தமிழக அரசு ராமருக்கு இலவச உயர் மருத்துவ சிகிச்சையும், நிவாரண உதவியும் வழங்க வேண்டும் என அவரது மகன் கோபால் கேட்டுக்கொண்டுள்ளார். கூலித்தொழிலாளிக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com