கடத்தி வரப்பட தங்கம்
கடத்தி வரப்பட தங்கம்புதிய தலைமுறை

திருச்சி விமான நிலையம் | ஜூஸ் போடும் இயந்திரத்தில் வந்த தங்கம்; கொத்தாக தூக்கிய அதிகாரிகள்!

துபாயிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தங்கம் பறிமுதல்!
Published on

திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 83 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானப் பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைநடத்தினர். அப்போது, ஜூஸ் தயாரிக்கும் இயந்திரம், உணவு பதப்படுத்துதல் இயந்திரத்தின் உள்ளே மறைத்து வைத்துதங்கத்தை கடத்தியது தெரியவந்தது. அதிலிருந்த சுமார் இரண்டரை கிலோ எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நான்கு நாட்களில் முதல் முறையாக அதிக அளவிலான கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com