20 வருடங்களுக்குப் பிறகு மணப்பாறையில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா

20 வருடங்களுக்குப் பிறகு மணப்பாறையில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா
20 வருடங்களுக்குப் பிறகு மணப்பாறையில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா

மணப்பாறை அருகே உள்ள பூவர்த்தி கோவில் பெரிய குளத்தில் 20-வருடங்களுக்கு பிறகு மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முச்சந்தி பூவர்த்தி கோவில் பெரிய குளத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் வழிபாடு செய்த பின்னர் தங்களது துண்டால் வெள்ளை வீசப்பட்டு மீன்பிடித் திருவிழா தொடங்கியது. கண்மாயில் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளிக் குதித்து ஓடி மீன்களை பிடிக்கத் தொடங்கினர்.

கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு இன்று நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்தனர். பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினர்.

அதில், நாட்டு வகை மீன்களான கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, ,விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. கண்மாயில் பிடித்த மீன்களை மகிழ்ச்சியோடு வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com