கருப்பசாமி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்: கோயில் நிர்வாகி கைது

கருப்பசாமி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்: கோயில் நிர்வாகி கைது
கருப்பசாமி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்: கோயில் நிர்வாகி கைது

கருப்பசாமி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்ததை அடுத்து கோயில் நிர்வாகி கைது!

கருப்பசாமி கோயிலில் ‘பிடிக்காசு’ வழங்கும் நிகழ்வின் போது 7 பக்தர்கள் உயிரிழந்ததை அடுத்து கோயில் நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.திருச்சி மாவட்டம் துறையூர் முத்தையாம்பாளையம் அருகே கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கருப்பசாமி கோயிலை நிர்வகித்து வந்தவர் தனபால்சாமி. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டும் நடைபெற்ற கோயில் திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இக்கோயில் திருவிழாவின் ஒருபகுதியாக முதல் இரண்டு நாட்கள் குறி சொல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. 

மூன்றாம் நாளான இன்று ‘பிடிக்காசு’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் பிடிக்காசை பிடிக்க முண்டியடித்தனர். அதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கந்தாயி,நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சாந்தி, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வள்ளி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பூங்காவனம், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமர், ராசவேல், கரூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமிகாந்தன் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் பெண்கள் மற்றும் 3 பேர் ஆண்கள். அத்துடன் 10-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிடிக்காசு தீர்ந்துவிட்டதாக எழுந்த வதந்தியால் இந்த கூட்ட நெரிசல் சம்பவம் நிகழ்ந்ததாக தகவல். முத்தையம்பாளையம் கருப்பசாமி கோயிலை நிர்வகித்து வந்த தனபால்சாமி என்பவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். அரசின் அனுமதி இல்லாமல் தனியார் இடத்தில் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com