பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய திருச்சி விவசாயி!
பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட திருச்சி விவசாயி ஒருவர், அவருக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்து எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். பத்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார். மரவள்ளிக்கிழங்கு, பருத்தி என சாகுபடி செய்யும் இவர், பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த திட்டங்களால் ஈர்க்கப்பட்டு அவருக்காக தனது நிலத்தில் ஒரு கோயிலை கட்டியுள்ளார். கோயிலில் மோடியின் மார்பளவு உருவச்சிலையை வைத்து வழிபடுகிறார்.
பாலபிஷேகம் தொடங்கி வழக்கமாக கோயில்களில் மேற்கொள்ளப்படும் பூஜைகளை செய்து இவரது குடும்பத்தினர் மோடி சிலையை வழிபடுகிறார்கள். தானும் தனது மனைவியும் சேர்ந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் சேர்த்து இந்த கோயிலை கட்டியதாக கூறும் சங்கர், கூடிய விரைவில் இந்த கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.