\
கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ வழங்க தீர்மானம் நிறைவேற்றுக: திமுக எம்.எல்.ஏ

கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ வழங்க தீர்மானம் நிறைவேற்றுக: திமுக எம்.எல்.ஏ

கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ வழங்க தீர்மானம் நிறைவேற்றுக: திமுக எம்.எல்.ஏ
Published on
திருச்சியை இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பியுள்ளார் திருச்சி கிழக்குத் தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இந்த கூட்டத்தின் போது பேசிய திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், ''மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் அவர், திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பினார். 
தமிழகத்தின் மத்திய பகுதியாக திருச்சி அமைந்துள்ளதால் தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் திருச்சிக்கு குறைந்த மணிநேர செலவில் சாலை மார்க்கத்திலும், ரயில் மற்றும் விமானம் மூலம் வந்து செல்ல முடியும் எனவும் இனிகோ இருதயராஜ் கூறினார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com