திருச்சி: கக்கன் புகைப்படத்தை அகற்றிய மாவட்ட தலைவர்-பதவி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி: கக்கன் புகைப்படத்தை அகற்றிய மாவட்ட தலைவர்-பதவி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சி: கக்கன் புகைப்படத்தை அகற்றிய மாவட்ட தலைவர்-பதவி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கக்கன் புகைப்படத்தை அகற்றிய மாவட்டத் தலைவரை நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கக்கன் புகைப்படத்தை அகற்றியதாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான
அருணாச்சலம் மன்ற வாயிலில் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அவர் பேசும்போது,

”கடந்த எப்ரல் 17 ஆம் தேதி மன்றத்தில் தியாகி கக்கன் போட்டோ திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வு முடிந்து நாங்கள் சென்ற பின்னர் தியாகி கக்கன் போட்டோவை மாவட்டத் தலைவர் ஜவஹர் தூக்கி எறிந்து விட்டார். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, உடனடியாக மாநிலத் தலைவர் அழகிரி தலையிட்டு மாவட்டத் தலைவர் ஜவஹரை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்கிறோம்” என்றார் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன். இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் முரளி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com