”காளையால் தான் எங்கள் காதல் திருமணம் கைகூடியது“ - காதல் தம்பதியினர் சொன்ன சுவாரஸ்ய கதை!

“காளையால் தான் எங்கள் காதல் திருமணம் கைகூடியது . அதனால் மூன்று ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறோம்” என்று திருச்சியை சேர்ந்த காதல் தம்பதியினர் பேட்டி அளித்துள்ளனர்.
திருச்சி காதல் தம்பதியினர்
திருச்சி காதல் தம்பதியினர்புதிய தலைமுறை

செய்தியாளர் : மருது (மதுரை)

திருச்சி மாவட்டம் , கல்லணையை சேர்ந்தவர்கள் காதல் தம்பதி உத்தமர் சீலி சரத்குமார் மற்றும் காயத்ரி தம்பதியினர். இவர்கள் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தன்னுடைய காலை ஒயிட் ரோஸை அழைத்து வந்துள்ளனர்.

காளையை குறித்து இவர்கள் பேசுகையில் காளையின் மீது இவர்கள் வைத்துள்ள அன்பை புரிந்துகொள்ளமுடிகிறது. இந்நிலையில் காளையை குறித்து காதல் தம்பதி காயத்ரி பேசுகையில், ”கடந்த ஏழு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடு அவிழ்த்து வருகிறோம். முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் அவிழ்க்க வந்திருக்கிறோம். மொத்தம் மூன்று காளைகள் வளர்த்து வருகிறோம். இந்த காளை வெள்ளை நிறத்தில் உள்ளது. அடிக்கடி ரோஸ் மாலை அணிவதால் இதற்கு ஒயிட் ரோஸ் என பெயர் வைத்திற்கிறோம். மேலும் மாட்டினால் தான் எங்களுக்கு காதல் திருமணம் நடந்தது. அதனால் அதிக அன்பு வைத்திருக்கிறோம்.காளையின் மீது வைத்த அன்பின் காரணமாகவே இம்மூன்று காளைகள் வளர்த்து வருகிறோம்.” என்று கூறியுள்ளார்.

காளையின் மீது இத்தம்பதியினர் வைத்திருக்கும் அன்பும் காளையின் காரணமாகதான் திருமணம் சாத்தியமானது என்று கூறுவதும் கேட்போரையும் காண்போரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com