\
 “சுஜித் மீட்புப்பணி குறித்து பொய் செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை” - திருச்சி ஆட்சியர்

 “சுஜித் மீட்புப்பணி குறித்து பொய் செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை” - திருச்சி ஆட்சியர்

 “சுஜித் மீட்புப்பணி குறித்து பொய் செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை” - திருச்சி ஆட்சியர்
Published on: 

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மீட்புப்பணிக்கு ரூ. 5 லட்சம் மட்டுமே செலவானது என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, “சுஜித் மீட்புப்பணிக்காக ரூ. 10 கோடி செலவானதாக சமூகவலைத்தளங்களில் வெளிவரும் செய்தி உண்மையில்லை. மீட்பு பணிக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து பொய் செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீட்புப்பணிக்காக ரூ. 5 லட்சம், 5,000 லிட்டர் டீசல் மட்டுமே செலவானது. எல்&டி, ஒஎன்ஜிசி, என்.எல்.சி, ஆகிய நிறுவனங்கள் தங்கள் செலவுத்தொகையை கோரவில்லை” எனத் தெரிவித்தார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com