\
ரூ.10 லட்சம் காசோலையை சுஜித் பெற்றோரிடம் வழங்கினார் ‌ஆட்சியர்

ரூ.10 லட்சம் காசோலையை சுஜித் பெற்றோரிடம் வழங்கினார் ‌ஆட்சியர்

ரூ.10 லட்சம் காசோலையை சுஜித் பெற்றோரிடம் வழங்கினார் ‌ஆட்சியர்
Published on

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சிறுவன் சுஜித்தின் பெற்றோரிடம் ரூ 10 லட்சம் தொகையை ஆட்சியர் வழங்கினார்.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித், 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் தோல்வி அடைந்தது. சுஜித்தின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. சுஜித்திற்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் பழனிசாமியும் அஞ்சலி செலுத்திவிட்டு, முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து பத்து லட்சமும் அதிமுக சார்பில் பத்து லட்சமும் சுஜித் குடும்பத்தினருக்கு வழக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்தினரிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி 10 லட்சம் ரூ‌‌பாய் இன்று வ‌ழங்கப்பட்டுள்ளது. அந்தத் தொகைக்கான காசோலையை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, நடுக்காட்டுப்பட்டிக்குச் சென்று சுஜித்தின் பெற்றோரிடம் வழங்கினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com