திருச்சி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்துநிலையத்தில் அரசுப் போக்குவரத்துக்கழக முன்பதிவு மையம் உள்ளது. அந்த மையத்தில் சென்னை செல்லும் ஒவ்வொரு பேருந்திலும் 10 டிக்கெட்டுகள் விஐபிகளுக்கு ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதனை கண்டித்து இன்று போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த காவல்துறையினர் தங்களை தாக்கியதாகக் கூறி, பயணிகளும் காவல்துறையினரை தாக்கினர். இந்த மோதலில் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தப் பிரச்னையால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.