திமுகவுக்கு ஏற்றமும் மாற்றமும் தந்த திருச்சி.. பின்னணியில் இருக்கும் வரலாறு!
திமுகவின் 12ஆவது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ள நிலையில், திமுகவிற்கும் திருச்சிக்குமான வரலாற்றுத் தொடர்பைப் பார்க்கலாம்.
திமுக இதுவரை நடத்திய 11 மாநில மாநாடுகளில், 6 மாநாடுகள் திருச்சியிலேயே நடந்துள்ளன. தற்போது 7ஆவது முறையாக திருச்சியில் மாநாடு நடைபெறுகிறது.
1956இல் திருச்சியில் நடந்த 2ஆவது மாநில மாநாட்டில்தான், தேர்தலில் போட்டியிடுவது குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை தொண்டர்களின் வாக்கெடுப்பு மூலம் அண்ணா அறிவித்தார்.
1990, 1996, 2006, 2014 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் திருச்சியில் நடந்த மாநாடுகள், திமுகவின் அரசியல் பாதையில் பெரும் மாற்றங்களையும், பலமுறை ஆட்சி மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
இதற்கு முக்கிய காரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கள்ளக்குடி ரயில் மறிப்பு போராட்டம் முதல் பல முக்கிய போராட்டங்களுக்கு திருச்சிதான் அடித்தளமாக அமைந்தது.
தமிழகத்தின் மையப்பகுதியாக இருப்பதுடன், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் எளிதில் வந்தடையக்கூடிய போக்குவரத்து வசதி இருப்பதும் திருச்சியில் மாநாடு நடவத்துவதற்கான காரணமாக உள்ளது. மீண்டும் ஒருமுறை திருச்சியில் நடைபெறும் இந்த 12ஆவது மாநில மாநாடு, தமிழக அரசியலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

