லாரி மீது ஆம்னி பஸ் மோதி தீப்பிடித்தது: 4 பேர் உடல் கருகி பலி!

லாரி மீது ஆம்னி பஸ் மோதி தீப்பிடித்தது: 4 பேர் உடல் கருகி பலி!

லாரி மீது ஆம்னி பஸ் மோதி தீப்பிடித்தது: 4 பேர் உடல் கருகி பலி!
Published on

லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் தீ பிடித்தது. இதில் பேருந்தில் இருந்த 4 பயணிகள் உடல் கருகி பலியாயினர்.

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி, ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து உளுந்தூர்பேட்டை, எடைக்கல் அருகே நள்ளிரவில் வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே சென்ற லாரியுடன் உரசியது.

இதில் பேருந்து திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் அலறினர். அவர்களின் கதறல் சத்தம் கேட்டு பேருந்தை டிரைவர் நிறுத்தினார். அதற்குள் தீ மளமளவென எரிய தொடங்கியது. விபத்து நடந்த நேரம் நள்ளிரவு என்பதால் பயணிகள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தனர். இதனால் 4 பேர் வெளியேற முடியாமல் பேருந்துக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் உடல் கருகி பலியாயினர். 12-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். 


 
தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்து காரணமாக திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com