திருச்சி: ரசாயனம் தடவிய மற்றும் கெட்டுப்போன 650 கிலோ மீன்கள் பறிமுதல்

திருச்சி: ரசாயனம் தடவிய மற்றும் கெட்டுப்போன 650 கிலோ மீன்கள் பறிமுதல்
திருச்சி: ரசாயனம் தடவிய மற்றும் கெட்டுப்போன 650 கிலோ மீன்கள் பறிமுதல்

திருச்சியில் 650 கிலோ, ரசாயனம் தடவிய மற்றும் கெட்டுப்போன மீன்களை மாநகராட்சி அதிகாரிகள் குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனர்.

திருச்சி உறையூரில் உள்ள லிங்கநகர் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், மீன்வளத்துறை துணை இயக்குநர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், மொத்தம் 14 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில், பார்மலின் தடவிய 350 கிலோ மீன்களும், கெட்டுப்போன 300 கிலோ மீன்களும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 650 கிலோ மீன்கள் மாநகராட்சி குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லபட்டு அழிக்கப்பட்டது.

தொடர்ந்து வியாபாரிகள் இதுபோன்ற ரசாயனம் தடவிய மீன்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com