பள்ளிப்பேருந்தில் இருந்து தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு

பள்ளிப்பேருந்தில் இருந்து தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு

பள்ளிப்பேருந்தில் இருந்து தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு
Published on

திருச்சியில் 3ம் வகுப்பு சிறுமி பள்ளி பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூ‌ர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கனிஷ்கா. இவர் வித்யாமந்திர் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற கனிஷ்கா, பின்னர் பள்ளி வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது பேருந்தின் கதவு திறந்ததால், எந்தவித பிடிமானமின்றி தடுமாறிய சிறுமி, ஓடும் பேருந்தில் இருந்த தவறி கீழே விழுந்தார். 

கீழே விழுந்த சிறுமி, பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்துள்ள காவல்துறையினர் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர். சிறுமி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com