கருணாநிதியின் நினைவிடத்தில் 3-ஆவது நாளாக அஞ்சலி

கருணாநிதியின் நினைவிடத்தில் 3-ஆவது நாளாக அஞ்சலி

கருணாநிதியின் நினைவிடத்தில் 3-ஆவது நாளாக அஞ்சலி
Published on

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் 3-ஆவது நாளாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நேற்று இரவு முழுவதும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. கருணாநிதியை அடக்கம் செய்த இடத்தில் கிரானைட் கற்‌கள் பதித்த மேடை அமைக்கப்பட்டு, அதனைச் சுற்றி தரைதளத்தில் ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், கருணாநிதியின் நினைவிடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கிரானை‌ட் கற்களால் ஆன மேடையின் மீது சூரிய வடிவில் பழங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நாளாக இன்று காலையிலிருந்தே தொண்டர்களும், பொதுமக்களும் வரிசையில் நின்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கருணாநிதியின் நினைவிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com