மலையேற்றம் செல்கிறீர்களா? காட்டுத் தீ குறித்து எச்சரிக்கும் எஸ்எம்எஸ்

மலையேற்றம் செல்கிறீர்களா? காட்டுத் தீ குறித்து எச்சரிக்கும் எஸ்எம்எஸ்

மலையேற்றம் செல்கிறீர்களா? காட்டுத் தீ குறித்து எச்சரிக்கும் எஸ்எம்எஸ்
Published on

மலை ஏற்றம் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இனி காட்டுத் தீ குறித்த தகவல்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என இந்திய வனக் கணக்கெடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் குரங்கணியில் மலையேற்றத்துக்கு சென்றவர்களில் 17 பேர் காட்டுத் தீக்கு பலியாகினர். மேலும் கர்நாடகம் மற்றும் கேரளத்தில் கோடைக் காலம் முடியும் வரை மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய வனக்கணக்கெடுப்பு ஆணையம் மலையேற்றம் அல்லது மலைவாசத் தளங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் தங்களது செல்போன் எண்ணை பதிவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. பதிவு, செய்தவர்களின் செல்போன் எண்ணுக்கு காட்டுத் தீ குறித்த எச்சரிக்கை பதிவுகள் அனுப்பப்படும். 

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 236 பேர், பெரும்பாலும் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் இந்த எச்சரிக்கை எஸ்எம்எஸ்க்கு பதிவு செய்துள்ளனர். மேலும், குரங்கணி காட்டுத் தீ சம்பவத்துக்கு பின்பு, 420 பேர் காட்டுத் தீ எச்சரிக்கை எஸ்.எம்.எஸ். பெறுவதற்காக செல்போன் எண்களை பதிவு செய்துள்ளனர். இது குறித்து டெஹ்ராடுனை தலைமையிடமாக கொண்ட இந்தியாவின் வனக் கணக்கெடுப்பின் துணை இயக்குனரான ஈ. விக்ரம் கூறுகையில், ‘தேனி தீ விபத்துக்குப் பிறகு நாங்கள் சுற்றுப்பயண இயக்குனர்களையும், மலையேற்றக்காரர்களையும் இது குறித்து சந்திக்க உள்ளோம். மக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுகையில் பாதுகாப்பையும் தீவிரமாக கருத வேண்டும்’ என தெரிவித்தார். 

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் நிகழ்ந்த காட்டுத்தீ சம்பவத்தின் எண்ணிக்கை, 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com