திருடுவது அவங்க.. சிக்குவது நாங்களா..?: பொதுமக்கள் கோபம்
தேனி வனபகுதியில் வன ஊழியர்களே விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்தி விட்டு, பொதுமக்கள் மீது பழி போடுவதாக புகார் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில், சந்தனம், தேக்கு, வேங்கை, உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. அந்த விலை உயர்ந்த மரங்களை அங்கு இருக்கும் வன ஊழியர்களே வெட்டி கடத்துவதாக புகார் எழுந்துள்ளது. கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்துவதாகவும், ஆனால் அங்கு உள்ள பொதுமக்கள் சுள்ளி பொறுக்குவதற்காக வனப்பகுதிக்கு செல்லும்போது அவர்கள் மீது வீணாக வழக்குப்பதிவதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
இது போன்று விலை உயர்ந்த மரங்களை வன ஊழியர்களே வெட்டி கடத்துவது அங்கு உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தெரியும் என கூறும் பொதுமக்கள் வழக்கு பதிய வேண்டுமே என்பதற்காக அந்த மலை பகுதிக்கு செல்லும் அப்பாவி பொது மக்கள் மீது வழக்கு போடுகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.

